விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அமெரிக்க வீராங்கனை!
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வாக்களிக்க உள்ளார்.
க்டோபர் மாத மத்தியில் விண்வெளிக்குச் செல்வதற்காக தற்போது ரஷ்யாவில் தங்கியுள்ள ரூபின்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறு மாதங்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளார்.
இதனால் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் விண்வெளியில் இருந்து வாக்களிக்கப் போவதாக கேட் ரூபின்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தன்னால் விண்ணிலிருந்தாலும் வாக்களிக்க முடியும் என்பதால், மண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரூபின்ஸ், ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.