கொல்கத்தாவில் துர்கா பூஜையின் முதல் பரிசை பெற்ற ரோபோ…!
![](https://thambattam.com/storage/2020/09/001-15-e1601113977798-780x470.jpg)
மேற்குவங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு ரோபோவிற்கு மக்கள் புடவை அணிவித்த நிகழ்வு பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்து மதப் பண்டிகையான துர்கா பூஜை நாடு முழுவதும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், நான்காம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், ஒருசில மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மேற்குவங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை மக்கள் வரவேற்கத் துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்கு புடவை அணிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் தன்மை குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே துர்கா பூஜையையொட்டி அதற்கு புடவை அணிவித்துள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவரந்துள்ளது.