பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் தனது 82 வயதில் இன்று காலமானார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங். இவர் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்தியதில் இவர் முக்கியமான தலைவர். மேலும் இவர் பாஜகவிலிருந்து 2014-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை மறைந்தார். இந்திய ராணுவத்திலிருந்து ஜஸ்வந்த் சிங் ஓய்வு பெற்றவர்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். “அரசியலிலும், சமூகப் பணியிலும் ஜஸ்வந்த் சிங்கின் செயல்பாடுகள் தனித்துவமானவை. பாஜகவை வலுப்படுத்தியதில் முக்கியமானவர். அவருடனான உரையாடல்களை என்றும் நினைவில் கொள்வேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x