ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா..!
![](https://thambattam.com/storage/2020/09/dinesh-gundu-rao-696x392-1.jpg)
காங்கிரஸ் கட்சியின் தமிழக புொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/09/Ei5iCJ_U0AICn1v-e1601191060174-300x188.jpg)
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், நேற்று முன்தினம் (செப்.,25) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில், தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ಕೋವಿಡ್ ಟೆಸ್ಟ್ ನಲ್ಲಿ ನನಗೆ ಯಾವುದೇ ರೋಗ ಲಕ್ಷಣಗಳಿಲ್ಲದ ಸೋಂಕು ತಗುಲಿರುವುದು ದೃಢಪಟ್ಟಿದೆ.
ನಿಮ್ಮೆಲ್ಲರ ಹಾರೈಕೆಯಿಂದ ಆದಷ್ಟು ಬೇಗ ಚೇತರಿಸಿಕೊಳ್ಳುವ ವಿಶ್ವಾಸವಿದೆ.
ನನ್ನ ಪ್ರಾಥಮಿಕ ಸಂಪರ್ಕದಲ್ಲಿದ್ದವರು ಪರೀಕ್ಷೆ ಮಾಡಿಸಿಕೊಳ್ಳಿ ಹಾಗೂ ಇನ್ನಿತರರಿಗೆ ಹರಡದಂತೆ ಅಗತ್ಯ ಮುಂಜಾಗ್ರತಾ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳಿ ಎಂದು ವಿನಂತಿಸುತ್ತೇನೆ.
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) September 27, 2020
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா பரிசோதனையில் எனக்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விரைவில் குணமடைவேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.