தோனியின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை!!
![](https://thambattam.com/storage/2020/09/Ei5jHh0U8AEDklG-e1601205829677-780x470.jpg)
டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முறியடித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்த கிரிக்கெட் வீரர் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் தரும் ஒன்றாக இருக்கிறது. டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்திருந்தார்.
![](https://thambattam.com/storage/2020/09/Alysa-Healy-300x225.jpg)
இந்நிலையில் தோனியின் இந்த சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முறியடித்துள்ளார். 98 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்களை தோனி வீழ்த்தியுள்ளார். அதே நிலையில் 114 போட்டிகளில் விளையாடிய அலிசா 92 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.