மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்.. கண்டும் காணாத மத்திய பாஜக அரசு!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. அத்துடன் பல கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அந்த வகையில், அவர்கள் தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த போராட்டம் 3 நாட்களை கடந்து தொடர்கிறது.
அதே போல் சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் தற்காலிகமாக போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.