புழுக்கம் தாங்காமல் விமான இறக்கை மீது நடந்த பெண்

உக்ரைனில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றுள்ளது. விமான பெண் பயணி ஒருவர் அவசர கால கதவு வழியாக வெளியே சென்று விமானத்தின் இறக்கை மேல் காற்று வாங்குவதற்காக சிறிது நேரம் நடந்து வந்துள்ளார். இவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
விமானம் ஏதாவது விபத்தில் சிக்கி கொண்டால் திறப்பதற்காக உள்ளது அவசரகால கதவு. இதனை தேவையில்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும். விமானம் தரையிறங்கிய பின்னர் சில நேரங்களில் தொழில்நுட்ப காரணங்களுக்காக பயணிகள் வெளியே அனுமதிக்கப்பட மாட்டர்.
இந்த வேளையில் விமானத்தில் குளிர்சாதன வசதி தடை செய்யப்படும். இதனால் விமானத்தினுள் சற்று வெப்பமாக இருக்கும். தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்வோர் அனைத்து பயணிகளுக்கும் இது நன்றாகத் தெரியும். இதேபோல துருக்கியிலிருந்து உக்ரைனுக்கு வந்த பயணிகள் விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டது. விமானம் சற்று நேரம் நின்றதும் விமான பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இந்த அசௌகரியத்தை சில நிமிடங்கள் சகித்துக் கொள்ளுமாறு விமானி அறிவித்தார்.
இதனை அடுத்து விமானத்துக்குள் குளிர்சாதன வசதி தடைசெய்யப்பட்டு வெப்பம் அதிகரித்தது. இதனால் பயணிகளுக்கு வியர்த்தது. காற்று வாங்குவதற்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் விமானத்தில் பயணித்த ஒரு பெண்மணி, அவசர கால கதவை திறந்துள்ளார்.
பின்னர் வெளியே இருந்த விமான இறக்கை மீது ஏறி அவர் சிறிது நேரம் காற்று வாங்கியபடி நடந்துள்ளார். பின்னர் உள்ளே சென்றார். அவர் சிறகு மீது நடந்து செல்வதை விமான போக்குவரத்து அதிகாரிகள் படம் பிடித்தனர். இதனை அடுத்து அவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.