சீனாவுக்கு எதிரான ‘REMOVE CHINA APP’… களமிறங்கிய கூகுள்… அதன்பிறகு நீங்களே படிங்க…

சீனாவின் வூகான் நகரில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும், வேண்டுமென்றே அந்த வைரஸ் தொடர்பாக அடுத்தடுத்து தவறான தகவல்களை சீனா கொடுத்து வந்ததாகவும் அமெரிக்கா பரபரப்பு புகார்களை முன்வைத்தது. இதனால் உலக நாடுகளின் மத்தியில் சீனா எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

இதுபோதாதென்று, இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. நம் இந்திய எல்லையில் சீனா முற்றுகையிட்டதை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியர்களிடையே சீனாவின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள இந்திய நிறுவனம் வடிவமைத்த REMOVE CHINA APP என்ற செயலிக்கு இந்தியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

இந்த REMOVE CHINA APP, நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சீன செயலிகளை தேடி கண்டுபிடித்து நம்மிடம் காட்டும். அதன் பின்னர் அந்த செயலியை டெலிட் செய்யவும் முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைத்த இந்த செயலியை இரண்டே வாரத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் டவுன்லோடு செய்துள்ளனர். டிக்-டாக் உள்ளிட்ட சீன செயலிகளை இந்த ஆப் டெலிட் செய்து வந்தது. இந்நிலையில் திடீரென கூகுள் ப்ளே ஸ்டோரில் REMOVE CHINA APP நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கூகுள் விதிகளின் படி மற்ற செயலிகளை நீக்குவதற்கு, இன்னொரு செயலி தூண்ட முடியாது. அது கூகுள் பிளே ஸ்டோர் விதிப்படி தவறாகும். அந்த வகையில், REMOVE CHINA APPஐ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டதாக கூகுள் விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்னதாக டிக்-டாக்கிற்கு போட்டியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மித்ரோன் செயலியும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x