தமிழகம்

கிடுகிடு உயர்வு…. இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 8வது நாளாக உயர்த்தியுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன.

நாட்டில் தமிழகம் உள்பட, கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் வாகன பயன்பாடு குறைந்தது. எனினும், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. கடந்த மே மாத முதல் வார இறுதியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 34 நாட்களுக்கு பின்னர், கடந்த 7ந்தேதி உயர்ந்தது. தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று 8வது நாளாக உயர்ந்து உள்ளது.

இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.79.53க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.72.18க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து சராசரியாக 60 காசுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்படும் இந்த விலை உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x