சோதனையில் வெற்றி பெற்று சாதனை படைத்த பிரம்மோஸ் ஏவுகணை!

ஒடிசா கடற்கரையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
இந்தியா – ரஷியா கூட்டிணைப்பில் நீண்டதூரம் சென்று இலக்கைத் தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று (புதன்கிழமை) காலை ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது.

பாலசூர் மாவட்ட கடற்கரைப் பகுதியில் தனி ஏவுதள வாகனம் மூலம் இன்று காலை 10.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று வெற்றிகரமாக இலக்கை அடைந்தது.
Congratulate @DRDO_India on the successful test firing of extended range #BrahMos supersonic cruise missile. The missile with an indigenous booster will further strengthen India’s defence capability. #DRDO
— Naveen Patnaik (@Naveen_Odisha) September 30, 2020
இதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருள்கள் இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவின் பாதுகாப்புத்துறை மேலும் பலம் பெற்றுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.