“இத எதுக்கு இவ்ளோ நாள் உருட்டணும்?” பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சாமானியர்களின் பார்வை!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை குறித்து பொதுமக்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பில் சதித்திட்டம் தீட்டி, ஆயிரக்கணக்கானவர்களைத் தூண்டி விட்டதாகவும், வன்முறையை ஏற்படுத்தியதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த லக்னோ நீதிமன்றம் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர் என தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் 32 பேரும் விடுதலை ஆகின்றனர். எனினும் சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இரண்டு வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. அதில், ஒன்று நிலம் யாருக்கு சொந்தமானது? மற்றொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான ‘கிரிமினல்’ வழக்கு! நிலம் தொடர்பான வழக்கில் “சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றாலும், மசூதி இடிக்கப்பட்டது தவறு” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால், தற்போது இதுவும் இந்துத்துவா பிரிவினருக்கே சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது என்று நாட்டின் தலைவர்கள் மட்டுமல்லாது சாமானிய மக்கள் பலரும் சமூக வலைத் தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
LK Advani and team tried to keep the #BabriMasjid safe.
— Aysha Renna (@AyshaRenna) September 30, 2020
Kapil Mishra tried to pacify the crowd in Delhi Violence.
What more do you expect from a system that is predominantly islamophobic?
https://twitter.com/FascismTalks/status/1311254246176813056?s=20
பாபர் மசூதி இடிப்பு . அனைவரும் விடுதலை. அடுத்து என்னடா உங்கள் அஜன்டா . .""யாரோ"சுட்ட"தோட்டா மகாத்மா காந்தியை தாக்க வந்தபோது அந்த தோட்டாவை தடுக்கவே கோட்சே தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தோட்டாவை தடுக்க நினைத்தார்.மகாகாந்தியை காப்பாற்றவே சுட்டார் என்று அடுத்த கதை வரும்.
— சண்முகபெருமாள் (@aynshanperu) September 30, 2020
பாபர் மசூதி தன்னைத் தானே இடித்துக் கொண்டது. அல்லது தானாக இடிந்து விழுந்தது. எப்புடி வேணா வச்சுக்கோங்க.
— Panimalar Panneerselvam (@PanimalarPs) September 30, 2020
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பில் ஆதாரம் இல்லை என்று அனைவரும் விடுதலை..!😑
— ☆VᎥjสy😍☬Kuᵗᵗ¥😍☆ (@vj_Kuttiy) September 30, 2020
மசூதியின் இடிப்பை தடுக்கவே அத்வானி ஜோஷி முயன்றனர் நீதிமன்றத் தீர்ப்பு😏😏😏
மக்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்👇👇👇😂😂😂🤣 pic.twitter.com/j8OElUrNBd
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை – சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பில் பாபர் மசூதி வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை!
— புரட்சிவேங்கை மு.பா (@MaruthuMakkal) September 30, 2020
இத்தனை நாள் ஆதாரமில்லாமல் தான் சிபிஐ விசாரித்ததா…
அனைவரும் நம்புங்கள் இது சனநாயக நாடு என்று…. pic.twitter.com/dRVImBXh8e
#BigNews | பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சந்தோஷ் நடராஜன் என்பவர் வரைந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது…!#meiarivu | #BabriMasjid | #BabriDemolitionCaseVerdict | @santosanthosh pic.twitter.com/iaZSarnZbK
— Mei Arivu (@meiarivu) September 30, 2020
நேற்று சேகர் ரெட்டி.. இன்று பாபர் மசூதி இடிப்பு !
— Barakath Ali (@sambarakathali) September 30, 2020
''சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை காங்கிரஸ் ஆட்சி தவறாக பயன்படுத்துகிறது'' என இதே நாளில்தான் 2013 செப்டம்பர் 30-ம் தேதி மும்பை வர்த்தகசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த குஜராத் முதல்வர் மோடி சொன்னார். pic.twitter.com/nhQ0HscwRk
“பாபர் மசூதி” இடிப்பு வழக்கு…
— Raju Bhai (@rajubhai_DMK) September 30, 2020
தீர்ப்பு சொன்ன சட்ச்சுக்கு ஒரு 🌺டுக்கு பார்சல்..
#போங்கடா_நீங்களும்_உங்கதீர்ப்பும் 😏😏
"பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை"
— Chinthan (@epchinthan) September 30, 2020
அதான, பாபர்மசூதின்னு ஒரு கட்டிடமே இருந்ததில்லை. அதை எப்படி இடித்திருக்கமுடியும்?
https://twitter.com/JeniOfficel/status/1311226257745432576?s=20
பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை -H.ராசா நீதிமன்றம்
— பூவத்தூர் தனபால் (@poovaidhanabal) September 30, 2020
ஆமா ஆயுதமெல்லாம் ஏற்கனவே பாபர் மசூதில இருந்துதாம் கூட்டத்த பாத்தோன்ன பாபரே உடைத்துக்கொண்டாராம்…கேடுகெட்ட ராமா