இப்படி மாட்டிக்கிட்டாரே அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்…!!
உலக அளவில் கொரோனா பற்றிய தவறான தகவல்களை அதிகம் வெளியிட்ட நபராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா பற்றிய 38 மில்லியன் ஆங்கிலக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர். அதில், கொரோனா குறித்து உலகிலேயே அதிக தவறான செய்திகளை அளித்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒட்டுமொத்த தவறான செய்திகளில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 38 சதவீத தவறான தகவல்களை அளித்துள்ளார். இதனை இன்போடெமிக் (infodemic) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரான சாரா இவானேகா கூறுகையில், “உலகிலேயே கொரோனா தொடர்பான தவறான தகவல்களை அதிகம் அளித்த ஒற்றை மனிதராக அமெரிக்க அதிபர் இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.