பீட்சா + கொரோனா… டெலிவரி இளைஞர் செய்த காரியம்

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மே மூன்றாம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹோட்டல்களில் பார்சல் பெற்றுக்கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. உணவை வீட்டுக்கே டெலிவரி செய்யும் சொமாட்டா, ஸ்விகி போன்ற செயலிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பீட்சாவை வீட்டில் டெலிவரி செய்ய சென்ற 19 வயது டெல்லி இளைஞர் ஒருவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகள் உட்பட மொத்தம் 89 பேரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
டெலிவரி செய்யப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் என மொத்தம் 17 பேர் தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அந்த பீட்சா டெலிவரி நபர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் வேலை செய்த உணவகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு மூடப்படுகிறது.