அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா உறுதி!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறற உள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ட்ரம்ப் உதவியாளரும், வெள்ளை மாளிகை மூத்த அதிகாரியுமான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தான் பிரச்சாரத்துக்கு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சென்றுள்ளனர்.
இதனையடுத்து இவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நானும் எனது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டதோடு, குணமாகும் முயற்சியிலும் உடனடியாக இறங்கிவிட்டோம். இந்த சூழலை இருவரும் இணைந்து சமாளிப்போம்.” என்று எழுதியுள்ளார். 74 வயதாகும் ட்ரம்ப் கொரோனா தொற்றால் தனக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.