சென்னையில் 16 வயது சிறுமியை கற்பழித்த பாஜக உறுப்பினர்… போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை!!!

சென்னை ஆவடி அருகே கொள்ளுமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்த தம்பதியின் மகளுக்கு 16 வயசாகிறது. ஆவடியில் உள்ள ஒரு தனியார் ஸ்கூலில் இந்த சிறுமி பிளஸ் 1 படித்து வருகிறார். அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படித்தான் கடந்த 4-ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். ஸ்கூல் லீவு என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து பாஜக கட்சியை சேர்ந்தவரான சீனிவாசன்(45) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
சிறுமி வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து உள்ளே நுழைந்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவும் ஆகிவிட்டார். சாயங்காலம் பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொல்லி சிறுமி கதறி கதறி அழுதுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவடி மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சீனிவாசனை தேடி வந்தனர்.
இறுதியில் தலைமறைவாக ஒரு இடத்தில் பயந்து பதுங்கி கொண்டிருந்தவரை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 16 வயதான சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த பாஜக உறுப்பினர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!