கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமேசான் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வளவா??
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 19,800 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னணு வணிகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் 10 லட்சத்து 37 ஆயிரம் முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் அமெரிக்காவில் உள்ள உணவு பொருள் விற்பனைக் கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களில் எதிர்பார்த்ததை விடவும் குறைவானவர்களுக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அமேசான் கூறியுள்ளது.
மேலும், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதலே, கொரோனா உறுதி செய்யப்படும் விவரங்கள், அனைத்து ஊழியர்களுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு, ஒரு அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது குறித்து அங்கு பணியாற்றுவோருக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அமேசான் கூறியுள்ளது.
உலகிலேயே கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம், கொரோனா உறுதி செய்யப்படும் ஊழியர்களின் விவரங்களை அளிப்பது தொடர்பாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அமேசான் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.