அக்டோபர் 5-ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை ஆரம்பம்!!

சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்டோபர் 5-ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, ரயில் நிலையத்துக்குள்ளேயே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.