விண்ணில் இன்று வெற்றிகரமாக பாய்ந்த கல்பனா சாவ்லா!!!
![](https://thambattam.com/storage/2020/10/kalpana-chawla-780x470.jpg)
இன்று அதிகாலை நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட சிக்னஸ் கார்கோ(Cygnus Cargo) என்ற விணகலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8 ஆயிரம் பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் இருந்து ஏவப்பட்டது. இதன் மூலமாக இன்று மீண்டும் வீர பெண்மணி கல்பனா சாவ்லா விண்கலம் மூலமாக தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்துள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/10/cygnus-cargo-300x200.jpg)
இந்த விண்கலம் 2 நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடையும்.
முன்னதாக கடந்த வியாழன் அன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென்று நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு அமைப்பில் சிறிய கோளாறு ஏற்படவே, அப்போது இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.