உலகின் உயரிய நோபல் விருது யாருக்கு? இன்று வெளியாகிறது அறிவிப்பு!!
![](https://thambattam.com/storage/2020/10/139084_Nobel-prize-crop-1-780x470.jpg)
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிற நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளது.
1896இல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக ஆல்ஃப்ரடு நோபல் இறந்தார். அவரது விருப்பப்படி, 1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
![](https://thambattam.com/storage/2020/10/1601862899879-300x157.jpeg)
இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர். நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்.
தொடர்ந்து 5 நாட்கள் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறு தினம் அக்டோபர் 7ம் தேதி வேதியியல் துறைக்கும், அக்டோபர் 8ல் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளன. அக்டோபர் 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி நாளான அக்டோபர் 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன.