ஹிந்தியில் தகவல் அனுப்பப்பட்டதாக சர்ச்சை… விளக்கமளித்த ரயில்வே!!!
![](https://thambattam.com/storage/2020/10/irctc-train.jpg)
ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, விரும்பும் மொழியை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சமீபத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணியருக்கு, ரயில்வேயில் இருந்து, ஹிந்தியில் தகவல் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கம் அளித்துள்ளது.
அதில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சுய விபரங்கள் என்ற தலைப்பின் கீழ், பயணியர் தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போது, டிக்கெட் தொடர்பான தகவல்களை பெற வசதியாக, ஆங்கிலம் அல்லது ஹிந்தி என, விருப்பமான மொழியை குறிப்பிட வேண்டும்.
சமீபத்தில் முன்பதிவு செய்த பயணி ஒருவரின் சுய விபரத்தில், விருப்பமான மொழி ஹிந்தி என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், கணினி, ஹிந்தியில் தகவலை பதிவு செய்து அனுப்பியது. இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், தங்கள் சுய விபரத்தை பதிவு செய்யும் போது, சரியான மொழி விருப்பத்தை தேர்வு செய்து குறிப்பிட வேண்டும்.” இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.