குறைந்த விலையில் ஏழைகளுக்கு நிறைந்த மருத்துவ சேவை அளிக்கும் குருத்வாரா மருத்துவமனை!!

நாட்டிலேயே மலிவு விலையில் மருத்துவ வசதிகளை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் வழங்க டெல்லியில் உள்ள குருத்வாரா பங்களா சாஹிப் முடிவு செய்துள்ளது.
குருத்வாரா வளாகத்தில் குரு ஹரிகிருஷ்ணன் மருத்துவமனை ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கு டயாலசிஸ் சிகிச்சைக்கு வெறும் ரூ.600 மட்டுமே வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக குருத்வாரா மேலாண்மை குழு தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

இதையொட்டி 6 கோடி ரூபாய் மதிப்பிலான டயக்நாஸ்டிக் கருவிகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இதில் நான்கு டயாலிசிஸ் கருவிகள், அட்ராசவுண்ட், எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட கருவிகள் இவற்றுள் அடங்கும். இந்த சேவைகள் மருத்துவர்கள் பரிந்துரைப்படி அவசியமாக தேவைப்படுவோருக்கு மட்டும் அளிக்கப்படும். மற்றவர்கள் 800 ரூபாயில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் சேவைகள் ரூ.150க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.