ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி உள்பட பலர் கைது!!
![](https://thambattam.com/storage/2020/10/ENwCunCU0AArUwQ.jpg)
ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலின இளம்பெண் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு நியாயம் கேட்டு திமுக மகளிர் அணியினர் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
![](https://thambattam.com/storage/2020/10/Ejkcu5yUwAA8-Vw-300x167.jpg)
இந்த பேரணி சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் போலீஸ் வேனில் ஏற்றினர்.
#WATCH Tamil Nadu: Dravida Munnetra Kazhagam (DMK) holds a candlelight vigil in Chennai against the #Hathras (UP) alleged gangrape case.
DMK MP Kanimozhi Karunanidhi along with few other party workers was detained later by the police. pic.twitter.com/NTWcX6lSyY
— ANI (@ANI) October 5, 2020
ஆனால், சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுத்து திமுகவினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணி நடந்த சின்னமலையிலிருந்து கிண்டி ஹால்டா தாண்டி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/10/EjkdI4IU8AENif6-300x225.jpg)
இதையடுத்து கனிமொழியிடம் நிலையை எடுத்துச் சொல்லி ஒத்துழைக்கும்படி போலீஸார் பேசினர். இதையடுத்து கனிமொழி தான் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட வாகனத்திலிருந்து இறங்கி வந்து தொண்டர்களிடம் பேசினார். பொதுக்களுக்கு நாம் இடையூறாக இருக்கக்கூடாது எனக் கேட்டு, வாகனத்திற்கு வழிவிடச் சொன்னார். இதையடுத்து தொண்டர்கள் வழிவிட, போலீஸ் வாகனத்தில் ஏறி கனிமொழி சென்றார்.
![](https://thambattam.com/storage/2020/10/EjkaPaoUYAInnyj-300x200.jpg)
பேரணி நடந்த சின்னமலைப் பகுதியில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அது சீரடையை சில மணி நேரம் ஆனது.