இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!
![](https://thambattam.com/storage/2020/10/Ejo0mu1XYAAcOt6-680x470.jpg)
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
![](https://thambattam.com/storage/2020/10/nobel-300x169.jpeg)
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்டோபர் 5 முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று மருத்துவத் துறைக்கும், இன்று இயற்பியல் துறைக்கும் நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS:
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2020 #NobelPrize in Physics with one half to Roger Penrose and the other half jointly to Reinhard Genzel and Andrea Ghez. pic.twitter.com/MipWwFtMjz— The Nobel Prize (@NobelPrize) October 6, 2020
அதன்படி இன்று, கருந்துளை பற்றிய ஆய்வுக்காக, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் தினங்களில் வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.