2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு!!

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நீடித்து வந்தது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் 15ஆம் தேதி முதலே அமைச்சர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர். இதற்கிடையில் அதிமுகவின் முதல்வர் யார் என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டப்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியோடு நான் அறிவிக்கிறேன்” என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த அறிவிப்பால் தமிழகத் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x