ஹாத்ராஸ் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய சட்டகல்லூரி மாணவர்கள்!

ஹாத்ராஸ் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடு முழுவதும் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஹாத்ராஸில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் உத்தரபிரதேச காவல்துறையினர் தவறாக செயல்படுவதாகவும் நாடு முழுவதும் சட்டம் பயிலும் 510 மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.