இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வானது உலக உணவு திட்ட அமைப்பு!!

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1901ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக முறையே மருத்துவம், இயிற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 83 நாடுகளில் 9 கோடி பேருக்கு உணவு வழங்கிய ஐ.நா.சபையின் உலக உணவு திட்ட அமைப்புக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x