ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான இரண்டாவது நேரடி விவாதம் ரத்து!!
![](https://thambattam.com/storage/2020/09/191205005729-joe-biden-donald-trump-split-file-exlarge-169.jpg)
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தேர்தலின் வேட்பாளர்கள் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோதல் நடைபெறவுள்ளது. அந்தத் தோதலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா். துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்காவில் தோதலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது. மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.
அதனைத் தொடர்ந்து துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி புளோரிடாவின் மியாமாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான இரண்டாவது அதிபர் தேர்தல் விவாதம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடன் உடன் விவாதிக்க ட்ரம்ப் மறுத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்டோபர் 22ஆம் தேதி டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லியில் திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.