இத்தாலியில், முகக்கவசம் அணிய எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்!!

இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மிலான் நகரில் முகக்கவசம் அணிய எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், ‘முகக்கவசம் அணியாவிட்டால் 1,200 டாலா் (சுமாா் ரூ.87,500) அபராதம் விதிக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு உள்பட கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கடுமையாக உள்ளன’ என்று தெரிவித்தனா்.
இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சுமாா் 3.50 லட்சத்தை எட்டியுள்ளது. 36,140 போ் பலியாகியுள்ளனா்.