அறிகுறியற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை! ஆறுதலளிக்கும் தகவல்…

- இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி
- அறிகுறி இல்லாத கொரோனாவால் அச்சமில்லை
- உலக ஆய்வுகளில், கொரோனா குறித்து புதிய தகவல்
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கூடி வருவதாக கூறப்பட்டாலும், பலரும் அறிகுறிகள் இன்றியே காணப்படுகின்றனர். அதாவது, அவர்களில் 99 சதவீதம் பேருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், தலைவலி, வறட்டு இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சுவை மற்றும் வாசனை அறியாமை, உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை. மிக இயல்பாகவே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, பரிசோதனை செய்தால் மட்டும் கொரோனா இருப்பது தெரியவரும்.
இந்நிலையில், இப்படி அறிகுறி இன்றி இருப்பவர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர், டெட்ரோஸ் தெரிவிக்கையில்,
“ அறிகுறிகள் அற்ற கொரோனாவால் எந்த ஆபத்தும் கிடையாது. இது மற்றவர்களுக்கு பரவாது. இது பல்வேறு நாடுகளிடம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், கொரோனாவின் பிறப்பிடமான வுகானில், சுமார் 91 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், அறிகுறிகள் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 300 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவியிருந்தால் நிலை என்னவாகி இருக்கும்?
அதுமட்டுமின்றி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அந்த 300 பேர் பயன்படுத்திய டூத் பிரஷ், கப், முகக் கவசம், டவல் போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆச்சர்யமாக, அவை எவற்றிலும் கொரோனா கிருமி காணப்படவில்லை.
மேலும், அந்த 300 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 1200 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்கள் யாருக்கு கொரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டது.
எனவே, அறிகுறிகள் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து, அவ்வளவு எளிதில் இன்னொருவருக்கு கொரோனா பாதிக்காது. இதற்கு மேற்சொன்ன விஷயங்களே ஆதாரம். எனவே, எந்த நாடுகளில், அறிகுறிகள் இன்றி கொரோனா நோயாகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டாலும், அதற்காக கவலைப்பட தேவையில்லை. ” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.