நிவர் புயல் முன்னெச்சரிக்கை: பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நண்பகல் 12 மணிக்குள் பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்’ இன்று (நவ.,25) இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛நிவர்’ அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, புதுச்சேரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது.