பீகாரில் 7 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தாய்.. கொல்லப்பட்ட 5 வயது மகன்.! பதற வைக்கும் சம்பவம்!!

பீகாரில் ஏழு பேரால் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதுடன், அவரது ஐந்து வயது மகன் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பிகாரின் பக்சர் மாவட்டம் சைகின் கிராமத்தில் சனிக்கிழமையன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஐந்து வயது மகனுடன் வங்கிக்குச் பணம் போடச் சென்றுள்ளார். வேலை முடிந்து அவர் திரும்பி வரும் வழியில் அவரை மறித்த ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை யாருமற்ற காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அவரையும், ஐந்து வயது மகனையும் கயிற்றால் கழுத்தை நெறித்து அருகில் இருந்த கால்வாயில் வீசி விட்டு, அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்துச் சென்று விட்டனர்.
பின்னர் அந்த வழியாக வந்த ஒருவர் இவர்களை பார்த்து உடனடியாக அருகில் உள்ள சதர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கே அந்த சிறுவன் வழியிலேயே மரணமடைந்து விட்டதாக கூறி விட்டனர். அந்தப் பெண் மட்டும் சிகிச்சையில் உயிர் பிழைத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்ரான் பிரதேச காவல் அதிகாரி கே.கே.சிங், “தொடர்புடைய குற்றவாளிகளில் முன்னி ராம் என்பவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான்’ மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரவித்துள்ளார். இந்த சம்பவம் பிகார் அரசியலில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது.