‘ரெம்டெசிவீர்’ மருந்தை கூடுதலாக இரண்டு லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ‘ஆர்டர்’!!

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவீர்’ மருந்தை கூடுதலாக இரண்டு லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் நோயின் தாக்கத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவீர்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து முதலில் சென்னை ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்துாரார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்கு பயனளித்ததை தொடர்ந்து அதிதீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதன்படி 1 லட்சத்து 67 ஆயிரத்து 500 மருந்துகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு உள்ளன. தற்போது தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கூடுதலாக இரண்டு லட்சம் மருந்துகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையில் மருந்துகள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்துகள் சில நாட்களுக்குள் பெறப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.