ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்டுள்ளனர்.!!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் நடப்பாண்டில் 75 முறை நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங், ஸ்ரீநகரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளா்களிடம் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீரில் நடப்பாண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக 75 முறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலமாக 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். 138 பயங்கரவாதிகள் மற்றும் அவா்களோடு தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ஸ்ரீநகரில் மட்டும் பயங்கரவாதிகளுடன் 8 துப்பாக்கிச் சண்டை நடந்தது. 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதேபோல் கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட அதிகம். பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் 19 பேரும், 21 மத்திய ரிசா்வ் போலீஸ் படையினரும்(சிஆா்பிஎப்) 15 ராணுவ வீரா்களும் வீர மரணம் அடைந்தனா்.
லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளைச் சோந்த பயங்கரவாதிகள் எந்த வழியிலாவது ஸ்ரீநகரில் கால் பதிக்க முயற்சிக்கின்றனா். ஆனால் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவா்களின் திட்டத்தை முறியடித்து விடுவோம். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 26 இளைஞா்களை, போலீஸாரின் கடின உழைப்பாலும், அவா்களின் பெற்றோா்கள் உதவியுடனும் திரும்ப மீட்டு வந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.