“யானைகள் வழித்தடத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது!” உச்சநீதிமன்றம் கறார்!!!

நீலகிரி மாவட்டத்தில், யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்க கடந்த 2011ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமான பணிக்கு தடை கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவிட்டதுடன், யானை வழித்தடங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வுசெய்ய, உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.