மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பில்லியனருக்கு நேர்ந்த கொடூரம்!!

மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார வாரிசு ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போசினி என்ற பிரபல ஆடை நிறுவனத்தின் நிறுவனர் தான் லா டிங் பாங்க். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்.  கிட்டதட்ட 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய இவரின் வாரிசான போனி எவிடா லா தனது பிறந்தநாளுக்காக தயாராகி வந்துள்ளார். அவர் தனது மார்பகங்கள் சிறியதாக இருப்பதாக தனது நண்பர்களிடம் கவலையுடன் கூறி வந்துள்ளார்.

அதோடு தனது மார்பகங்களை பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முன்பு பெரிதாக்க நினைத்துள்ளார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, மார்பகங்களை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து குறிப்பிட்ட நேரம் கழித்தும், போனி கண்விழிக்காததால், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

https://www.instagram.com/p/YfXGGfiVLL/?utm_source=ig_web_copy_link

இதனால் போனியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போனி குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் தான் பல உண்மைகள் வெளி வந்துள்ளன. எந்த விதமான அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்த அறுவை சிகிச்சை மையத்தில் தான் போனி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படவில்லை. அதோடு அறுவை சிகிச்சை தொடங்கும் முன், அதிக அளவு மயக்க மருந்தை அவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் தான் போனி உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

34 வயதாகும் போனிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். ஹாங்காங்கை சேர்ந்த மிகப்பெரிய ஆடை நிறுவனத்தின் வாரிசான இவரது மறைவுக்கு அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x