கனமழையால் நிலைகுலைந்த ஐதராபாத் நகரம்… வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மக்கள்..!
![](https://thambattam.com/storage/2020/10/owaisi1-780x470.jpg)
ஐதரபாத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஒருவர் சிக்கி அடித்துச் செல்லும் காட்சிகள் பதை பதைக்க வைத்துள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது.
எப்போதும் இல்லாத அளவாக 24 செ.மீ மழை பதிவாககியுள்ளதால். ஐதராபாத் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தால் இதுவரை குழந்தை உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஹைதரபாத் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாக பதை பதைக்க வைத்துள்ளது.
#HyderabadRains– #recordbreak Heaviest rainfall recorded – 14 oct 2020 (192mm)- this is a record break for Hyderabad AP station. About seven years ago – 98.3 mm rainfall recorded on 10th October 2013. #Hyderabad #HyderabadFloods #Telangana pic.twitter.com/K0eS1PUAi1
— Rishika Sadam (@RishikaSadam) October 14, 2020
அந்த வீடியோவில் முக்கிய கட்டிடங்கள் நிறைந்த சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, அந்த நபர் அடித்து செல்லப்படுகிறார். தனது உயிரை காப்பாற்ற அருகில் இருந்த மின்கம்பியை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் வெள்ளம் வந்த வேகத்தில் நிலைகுலைந்து மூழ்குகிறார். அவர் கரை சேர்ந்தாரா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.