நீரவ் மோடியின் மனைவி, அமிராமோடிக்கு எதிராக இண்டர்போல் “சிவப்புகார்னர்” நோட்டீஸ்..

அமலாக்கத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் பஞ்சாப் நேஷனல்வங்கி மோசடி வழக்கின் முக்கியக் குற்றவாளியான நீரவ் மோடியின் மனைவிக்கு சர்வதேச காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றுமோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர் நீரவ்மோடி. லண்டன் தப்பிச் சென்ற நீரவ்மோடி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றிய அவரது மனைவி அமிராமோடிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அமலாக்கத்துறை, இண்டர்போலைக் கோரியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இண்டர்போல் அமிராமோடிக்கு எதிராக சிவப்புகார்னர் நோட்டீஸை வெளியிட்டது. முன்னதாக நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் மோடி மற்றும் சகோதரி பூர்வி மோடி ஆகியோருக்கு எதிராக இதேபோன்று இன்டர்போல் முன்பு நோட்டீஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.