லடாக்கில் மத்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய சீன இடையே லடாக் எல்லையில் பதற்றம் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் இன்று லடாக் சென்றார்.
இந்திய சீன இடையேயான எல்லை தகராறு பல புதிய சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. போரை தவிர்க்கும் நோக்கில், இரு தரப்பு படைகளையும், எல்லையிலிருந்து விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், பதற்றம் தணியாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று (ஜூலை17) இரண்டு நாட்கள் பயணமாக லடாக் சென்றார். அவருடன் ராணுவ தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளும் சென்றனர்.
இதன்போது, லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு செய்கிறார். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.