புதிய 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!!
உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வரும் 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள மக்களை பொருளாதார ரீதியாகவும், ஊட்டச்சத்து மூலமாகவும் வலிமையானவர்களாக மாற்றும் எப்ஏஓ-வின் பயணம், ஈடு இணையற்றதாகும். இந்த அமைப்புடன் இந்தியாவுக்கு வரலாற்று தொடர்பு உள்ளது. இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி டாக்டர் பினய் ரஞ்சன் சென், இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார்.
2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வென்ற உலக உணவு திட்டம், அவரது காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகை ஆண்டு எனவும், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனையை எப்ஏஓ ஏற்றுக் கொண்டது.
இதனை சிறப்பிக்கும் விதமாகவும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் வெளிபடுத்தும் விதமாகவும் அதன் 75-வது ஆண்டில் இந்திய பிரதமர் மோடி 75 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை இன்றுவெளியிட்டார்.