மாஸ்க் அணியாததால் சிறுநீரகத்தை சிதைத்த போலீஸ்

முகக்கவசம் அணியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் இளைஞரை, ஆறுமுகநேரி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி அவரது சிறுநீரகத்தை செயலிழக்க வைத்துள்ளனர்.

காயல்பட்டினத்தை சேர்ந்த 32 வயதான ஹபீப் முகமது, கடந்த வாரம், முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். இதையடுத்து அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலிஸார், அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

4 போலீசார் சேர்ந்து மாறிமாறி தாக்கியதில் ஹபீப்பின் சிறுநீரகம் சிதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக, ஹபீப் முகமது குடும்பத்தினர் புகார் அளிக்கவில்லையாம். தற்போது, ஹபீப் குடும்பத்தினர் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் போலீசார் மேற்கொள்ளும் காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கு எப்போது முடிவு கட்டப்படும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x