தொடர்ந்து உயரும் தங்கம்!! ரூ.249 அதிகரிப்பு…

தங்கத்தின் விலை கடந்த மாதம் சற்று குறைந்துவந்த நிலையில் இந்த வாரம் தொடக்கத்தின் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.249 அதிகரித்து ரூ.37,128- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.4,641க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.67.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.67.30 ஆகக் குறைந்துள்ளது.