நீட் தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது தேசிய தேர்வு முகமை… மாணவர்கள் அதிர்ச்சி!!
![](https://thambattam.com/storage/2020/09/1600x960_125704-neet-2020-780x470.jpg)
தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி இருந்ததை தொடர்ந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது. நீட் முடிவு நீக்கப்படலாம் அல்லது தற்காலிகமாக பார்க்க முடியாது என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என குளறுபடிகள் அம்பலமானதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேரில் 1738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37, 301என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/10/neet-result-257x300.jpg)
இந்த குளறுபடி என்பது பிரிண்டிங் தவறால் ஏற்பட்டுருக்கலாம் என்றும் இதற்கான புதிய அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று தேசிய முகமை தேர்வு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு, “குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வு எழுதிய எண்ணிக்கையில் குளறுபடி இருக்கும்போது மதிப்பெண்களில் முறைகேடு நடக்காமல் இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.