செட்டிநாடு குழுமத்தில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத ரூ. 7 கோடி சிக்கியது!

சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட செட்டிநாடு குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஏஎம் ராமசாமி செட்டியாருக்கு பிறகு, அவருடைய வளர்ப்பு மகன் அய்யப்பனை தலைவராக கொண்டு செட்டிநாடு குழுமம் செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு சொந்தமாக நாட்டின் பல இடங்களில் செட்டிநாடு சிமெண்ட்ஸ், செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனைகள், செட்டிநாடு பவர் கார்பரேசன், செட்டிநாடு குவார்ட்ஸ் நிறுவனம்,
கண்ணாடிகள் தயாரிக்க உதவும் சிலிகாவை தயாரிக்கும் செட்டிநாடு எம்பி-எப் சிலிகா நிறுவனம், செட்டிநாடு லாரி நிறுவனம், கப்பல் நிறுவனம், நிலக்கரி கிட்டங்கி நிறுவனம், காபி- பணப் பயிர், பழத் தோட்டங்கள், கட்டுமான நிறுவனம், ஜவுளி நிறுவனம், ஸ்டீல் பேப்ரிகேசன், விண்ட் பவர், என்ஜினியரிங், பல் மருத்துவக் கல்லூரிகள், செளத் இந்தியா நிறுவனம், செட்டிநாடு பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன.