10th, +2 ல முதல் மார்க்… ஆனால் நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மாணவர்!!

சென்னை பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் சாய் அக்சய் என்பவர், நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிட்டப்பட்டன. அதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான போட்டியில், இந்திய அளவில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.மேலும், இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 -வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சாய் அக்சய் என்ற மாணவர் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண் பெற்றார். மேலும் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 516 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். ஆனால், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மா்ர்க் பெற்றுள்ளார். இதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. நன்றாக படிக்கும் மாணவர் ஒருவர் பூஜ்ஜியம் மார்க் வாங்கியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.