பஞ்சாப் சட்டசபையில், மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்..

மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பார்லிமென்டில், மூன்று வேளாண் சட்டங்கள் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின், அது சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வர் அமரீந்தர் சிங், இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று(அக்.,20) நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை, முதல்வர் அமரீந்தர் சிங் தாக்கல் செய்தார். அவையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
பின் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில கவர்னர் வி.பி.சிங் பட்னோரை சந்தித்து, சட்டசபையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி கோரிக்கை விடுத்தார்.