பிரச்சாரத்தின் இடையில் பெய்த மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்!
![](https://thambattam.com/storage/2020/10/kamala-haris-e1603262239103-780x470.jpg)
நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்தில் ஒவ்வொரு தலைவர்களின் செயல்முறைகளும் வைரலாகி வருகிறது.
அதில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துக் கொண்டார் கமலா ஹாரிஸ். அப்போது அங்கு மழை பெய்ததால், குடையை பிடித்துக் கொண்டு பேசினார்.
https://twitter.com/FirenzeMike/status/1318382617717243906?s=20
தொடர்ந்து மழை பெய்துக் கொண்டிருந்தால், குடையை பிடித்துக் கொண்டே நடனமாட துவங்கினார். அந்த புகைப்படத்தை கமலா ஹாரிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், வீடியோ அவரது ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடனமாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.