தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கிய இங்கிலாந்து!!
![](https://thambattam.com/storage/2020/10/LTTE-flag-780x470.jpg)
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறி பல்வேறு நாடுகள் அந்த அமைப்பினை தடை செய்திருக்கின்றன. இங்கிலாந்து, இந்தியா உளப்பட பல்வேறு நாடுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக இந்த தடையை நீக்க கோரி இங்கிலாந்தில் இருக்க கூடிய பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கானது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது ஜூலை மாதம் 29, 30 ஆகிய இரு தேதிகளில் மூடப்பட்ட நீதிமன்றத்திலும், அதேபோல திறந்த நீதிமன்றத்திலும் விசாரணையானது நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/10/2048-300x225.jpg)
இங்கிலாந்து நேரப்படி காலை 10.30 மணி அளவில் இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது நீக்கப்பட்டு விதிக்கப்பட்ட அந்த தடை செல்லாது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த விடுதலை புலிகள் அமைப்பை பொறுத்தவரையில் அந்த அமைப்பு பிரிட்டனில் எந்தவிதமான நாச செயல், அல்லது எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை. எனவே இந்த தடை நீக்கப்படுவதாக பிரிட்டன் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
(1/2)
— சீமான் (@SeemanOfficial) October 21, 2020
இந்த தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “பிரித்தானியா நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!!” என்று கூறியுள்ளார்