வியட்நாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!
![](https://thambattam.com/storage/2020/10/vietnam-flood3-e1603285552575-780x470.jpg)
வியட்நாமில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.
வியட்நாம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் கடுமையான வெள்ளபாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளபாதிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
![](https://thambattam.com/storage/2020/10/vietnam-flood2-300x225.jpg)
மத்திய வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 111ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 22 பேர் காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
![](https://thambattam.com/storage/2020/10/vietnam-flood1-300x200.jpg)
மழை வெள்ளத்தால் நாடு முழுவதும் 7,200 ஹெக்டேருக்கும் மேற்பட்ட உணவுப் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் 6 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமானதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.