“கொரோனாவில் இருந்து தன்னையே காப்பாற்ற தெரியாத டிரம்ப், மக்களை எப்படி காப்பாற்ற போகிறார்?” ஒபாமா அதிரடி பிரச்சாரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி உள்ளது. எனவே கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனை ஆதரித்து முன்னாள் அதிபர் ஓபாமா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் “8 மாதங்களாக நமது நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் தவறிவிட்டார். கொரோனாவில் இருந்து நம்மை காக்க அவர், முதல் படியை கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலையை செய்யவும் அவர் ஆர்வம் காட்டவில்லை.” என்றார் மேலும், “அவருக்கு சீனாவில் வங்கி கணக்கு உள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்ட செய்தியில் இருந்து அவர் தெரிவித்தார்.
நியூயார் டைம்ஸ் தகவல்படி “டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கணக்கில் சீனாவுக்கு டிரம்ப் வரி செலுத்தி வருகிறார். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் சீனாவுடனான வர்த்தகத்தை துண்டித்தார். இந்நிலையில், அவர் மட்டும் சீனாவில் வர்த்தகம் செய்து வருவகிறார்” என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவர் மட்டுமின்றி, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனும், அவருக்கு சொந்தமான தொழில் நிறுவனத்தை சீனாவில் இயக்கி வருவதாக நியூயார் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலுக்கு, இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அங்கு இரண்டு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பத்திரிகைகளும் அதிபர் வேட்பாளர்கள் பற்றிய சுவாரசிய விவரங்களை சேகரித்து வெளியிட்டு வருகிறது.