நாளை துபாயில் லேண்ட் ஆகிறது ‘ஹெலிகாப்டர்’

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, நாளை தனி விமானம் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாய்க்கு செல்ல உள்ளனர்.
13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில், அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு அணிகளும் தனி விமானம் மூலம் இன்று முதல் துபாய்க்கு செல்கின்றன. இதன்படி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டன.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள், நாளை மதியம் 1 முப்பது மணிக்கு தனி விமானம் மூலம் துபாய்க்கு செல்ல உள்ளனர். 160 பேர் செல்லக்கூடிய விமானத்தில், 60 பேர் மட்டுமே செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, சென்னை அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.